திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 6 டிசம்பர் 2023 (13:15 IST)

சென்னை வரலாற்றில் 6வது முறையாக 2000 மிமீ மழை

Rain Chennai
மிக்ஜாம் புயல் மற்றும் 47 ஆண்டுகளில் இல்லாத அதிகனமழையால் ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தமித்துள்ளது.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உதவி செய்து வருகிறது. முக்கியமாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் விமானப் படை மூலம் உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை வரலாற்றில் 6வது  முறையாக இந்தாண்டில் 2000 மிமீ மழை பெய்துள்ளது. 1976, 1985, 199, 2005, 2015,2023 ஆகிய ஆண்டுகளில் பெருமழை பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளான தரமணி, துரைப்பாக்கத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகச் சென்று, மீட்பு நடவடிக்கைகள் கேட்டறிந்து மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.