செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 டிசம்பர் 2023 (11:47 IST)

புயலிலிருந்து மீள்வதற்குள் தேர்வு நடத்துவது அவசியமா? – சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்!

Su Vengadesan
புயல் மழை காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யூஜிசி நெட் தேர்வுகள் நடத்தப்படுவதை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.



வங்க கடலில் உருவான மக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் மக்கள் முகாம்களில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் யூஜிசி உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கான தகுதி தேர்வான நெட் (National Elegibility Test) தேர்வை இன்று இந்தியா முழுவதும் நடத்துகிறது. இந்த தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன.

இதுகுறித்து பேசியுள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன் “ஒன்றிய அரசின் உயர் கல்வித்துறை யூஜிசி தேர்வுகளை இன்று சென்னையின் பல பகுதிகளில் நடத்துகிறது. மிக்ஜாம் புயலின் பாதிப்புகளிலிருந்து சென்னை இன்னும் மீளவில்லை என்பதை ஒன்றிய கல்வித்துறை அறியாதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

பலர் வீடுகளை விட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ள இந்த நிலையில் பலரால் இந்த தேர்வை எழுத இயலாது என்பதால் தேர்வு தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Edit by Prasanth.K