1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (17:45 IST)

தமிழகம் முழுவதும் நாளை 2000 சிறப்பு மருத்துவ முகாம்கள்: அமைச்சர் சுப்பிரமணியன்

தமிழக முழுவதும் நாளை 2000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக நாளை முதல் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை 2000 மழை கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்றும் காலை 9 மணி முதல் நாளை 4:00 மணி வரை மழைக்கால சிறப்பு முகாம்களில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு முகாம் 100 இடங்களில் நாளை நடைபெறும் என்றும் சென்னை மாநகராட்சியில் மட்டும் 100 முகாம்கள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். 
 
கடந்த ஐந்து வாரங்களில் நடைபெற்ற 10,576 முகாம்களில் 5 லட்சத்து 21 ஆயிரத்து 853 பேர் பயன் அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran