வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 10 ஜூலை 2024 (13:51 IST)

சவுக்கு சங்கரின் குண்டர் சட்ட வழக்கு. உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் விலகல்..!

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்து  அவரது தாயார் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மேல்முறையீடு மனு விசாரணையிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்து  அவரது தாயார் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில், தான் இடம்பெறாத அமர்வு முன் மனுவை பட்டியலிடுமாறு, தலைமை நீதிபதிக்கு கோப்புகளை நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
 
குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக  பெண் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டது. அட்துமட்டுமின்றி மொத்தம் 7 வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கரை குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை  மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்ட்டிருந்தார். 
 
இந்நிலையில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்து  அவரது தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது
 
Ediited by Siva