வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2022 (22:36 IST)

காளான் பறிக்க சென்ற2 பெண்கள் அருகே 2 பெண்கள் கொலை!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 2 பெண்கள் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெரிய வளையம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர்கள் மலர்விழி, கண்ணகி. இவர்கள் கடந்த 23 ஆம் தேதி காலையில் காளான் பறிக்க வயலுக்குச் சென்றுள்ளனனர்.

அதன் பின் இருவரும் வீடு திரும்பவில்லை. இந்த  நிலையில் இருவரும் கொலைசெய்யப்பட்டுள்ளதை பார்த்தவர்கள் உடனே போலீஸுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், பிரேதங்களை மீட்டு உடற்கூராய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதில், இருவரும் கழுத்தில் அணிந்திருந்த  நகைகள் 6 பவுனைக் காணவில்லை எனவும், நகைக்காக கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj