1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 25 அக்டோபர் 2022 (18:43 IST)

சாராய அமைச்சருக்கு எல்லாம் மரியாதை கொடுக்க முடியாது: அண்ணாமலை

Annamalai
முதலமைச்சர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஒரு கேள்வி கேட்டால் அவருக்கு பதில் சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன். ஆனால் சாராய அமைச்சருக்க் எல்லாம் மரியாதை கொடுக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
காலையில் எழுந்தவுடன் எத்தனை ரூபாய்க்கு சாராயம் விற்கலாம், மதியம் எவ்வளவு சாராயம் விற்பனையாகிறது என்று கணக்கு பார்க்க கூடிய சாராய அமைச்சருக்கு மரியாதை கொடுக்க முடியாது
 
அவர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரையும் எடுத்து வருகிறார். அவருக்கு ஏன் மரியாதை? நான் ஏற்கனவே கூறியது போல் சாராய அமைச்சர் விரைவில் ஜெயிலுக்குப் போவது உறுதி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் 
 
மேலும் தீபாவளி அன்று டாஸ்மாக் விற்பனை எவ்வளவு என்று பதிவு செய்த பத்திரிகைகளை அமைச்சர் மிரட்டி உள்ளார் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஆளுங்கட்சி பத்திரிகையை மட்டும் மிரட்டவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva