1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (10:36 IST)

சென்னை சேத்துப்பட்டில் மின்சார ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழப்பு

தண்டவாளத்தை கடக்கும் போது இரு வாலிபர்கள் மின்சார ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மின்சார ரயில் மோதி ஏற்படும் விபத்துக்கள் அதிகமாகி வருகிரது. சமீபத்தில் கூட கோடம்பக்கம் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தை 3 வாலிபர்கள் கடக்க முயன்றனர். அப்போது, அந்த பாதை வழியாக வேகமாக வந்த மின்சார ரயில் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது மோதியது. இதில் அவர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
இந்நிலையில் இன்று சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் முனிவேல், கிஷோர்குமார் ஆகிய இரண்டுபேர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது வேகமாக வந்த மின்சார ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.