1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 19 செப்டம்பர் 2022 (08:04 IST)

செம்பரம்பாக்கம் ஏரியில் செல்பி எடுக்கும்போது தவறி விழுந்த 2 பேர் பலி: அதிர்ச்சி சம்பவம்

chembarapakkam
சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த 2 வாலிபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையை அடுத்த குன்றத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற 20 வயது நபர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர் ரிச்சர்ட் என்பவருடன் சேர்ந்து நேற்று மாலை செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்றார்
 
அந்த ஏரியை சுற்றி பார்த்து விட்டு இருவரும் மதகில் ஏறி நின்றபடி செல்பி எடுத்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் ஏரிக்குள் விழுந்துவிட்டனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் 
 
இதனையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து இருவரையும் உடல்களை மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க கூடாது என பலமுறை வலியுறுத்தியும் இந்த இளைஞர்கள் செல்ஃபியால் தங்கள் விலைமதிப்பில்லா உயிரை இழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.