வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 17 செப்டம்பர் 2022 (23:01 IST)

பாமக சார்பில் துப்பாக்கி சூட்டில் பலியான 21 தியாகிகளுக்கும் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

pmk
இட ஒதுக்கீடு கேட்டு 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு துப்பாக்கி சூட்டில் பலியான 21 தியாகிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறுவது வழக்கம்.....


அந்த வகையில் இன்று செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி கரூர் மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் சங்க மாநில துணை தலைவர் வே கண்ணன் அவர்களின் தலைமையில் கரூர் பேருந்து நிலையம் அருகே ஏற்பாடு செய்திருந்த 21 தியாகிகளின் திருவுருவ படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் திரு பி எம் கே பாஸ்கரன் அவர்கள், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்..... முன்னதாக தியாகிகளின் பெயரை கூறி வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது......


இந் நிகழ்வில் வன்னியர் சங்க நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் மாகாளி மாவட்ட தலைவர் கார்த்திகேயன் , சரவணகுமார், மாநில நிர்வாகிகள் வாங்கல் சதீஷ் அச்சமாபுரம் முத்து மாவட்ட நிர்வாகிகள் அன்பழகன் கந்தன் முருகன் செந்தில் வேலுச்சாமி சாதிக் அலி ராக்கி முருகேசன் வரதராஜன் முத்துகிருஷ்ணன் பொறியாளர் மணிகண்டன் சுஜாதா கிரிஜா நித்யா வாங்கல் சிவா  மு.ராஜா ..... ஒன்றிய செயலாளர்கள் பூபதி எஸ் ஆர் ரவி , பாக்கியராஜ் வாசுதேவன் முருகேசன் சுரேஷ் புவியரசு அய்யனார் தமிழ்மணி  பிரபு செந்தில் ராஜா  ஒன்றிய நிர்வாகிகள் சக்திவேல் முத்து ராமன் சூரியா பிரபு திவாகர் சுகுமார் சிவகுமார் கண்ணையன் அய்யப்பன் கவின் சூரியா குட்டி  தாமரை ஹரி வேல்முருகன் அழகர் கிஷோர் முருகேசன் ராகுல்  உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.