1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 7 மே 2018 (16:12 IST)

பள்ளியில் ஆசிரியர் சுட்டுக் கொலை: பீகாரில் பரபரப்பு

பீகாரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பீகாரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் ராதேஷ் ரஞ்சன். இவர் இன்று வழக்கம்போல் பள்ளியில் மாணவர்களுக்கு சமஸ்கிருத பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆசிரியரை துப்பாக்கியில் சுட்டனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

 
 
இது தொடர்பாக போலீஸ் நடத்திய விசாரணையில், ஆசிரியர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கொலை வழக்கில் சமந்தப்பட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.