செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 7 மே 2018 (19:24 IST)

நெல்லை காவலர் ஜெகதீசனை கொலை செய்தவர்கள் இவர்கள்தான்

இன்று அதிகாலை நெல்லை அருகே காவலர் ஜெகதீசன் என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மணல் கொள்ளையர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் பொதுமக்களை மட்டுமின்றி காவல்துறையினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 
 
இந்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெகதீசனை கொலை செய்த கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் தீவிர விசாரணணக்கு பின்னர் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
 
ஜெகதீசனை கொலை செய்த இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள நெல்லை காவல்துறை, 'நெல்லையில் காவலர் ஜெகதீசன் கொலை சம்பவத்தில் தேடப்படும் நபர்கள் இவர்கள்தான் என்றும், இவர்களை எங்கு பார்த்தாலும் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை 100க்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது.
 
மேலும் இந்த இருவரையும் பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் இருப்பதால் வெகுவிரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது