புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 25 செப்டம்பர் 2021 (11:54 IST)

2 நாளில் 2,512 ரவுடிகள் கைது - சல்லடை போட்டு சலித்த காவல்துறை!!

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.

 
தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு சமீபத்தில் நியமிக்கப்பட்டார். பதவியேற்ற போது அவர் தமிழகத்தில் குற்ற செயல்களை தடுக்க முன்னுரிமை அளித்து செயல்படுவேன். முதலமைச்சர் தனிப்பிரிவில் அளிக்கப்படும் புகார்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும் என தெரிவித்தார். அதன்படி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. 
 
இந்நிலையில் அவர் சமீபத்தில் பேட்டியளித்த போது, தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 733 ரவுடிகள் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 5 துப்பாக்கிகள், 934 கத்தி, அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.