ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 25 செப்டம்பர் 2021 (10:59 IST)

எங்கே சறுக்கிய ஆர் சி பி… ஆரம்பம் சிறப்பா இருந்தும் காலை வாரிய பேட்ஸ்மேன்கள்!

சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்த நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி மிக எளிதாக வெற்றி பெற்றது.

சென்னை மற்றும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆர் சி பி அணியில்  தேவ்தத் படிக்கல் 70 ரன்களும் விராட் கோலி 53 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் சேர்த்த பெங்களூர் அணி அடுத்த பத்து ஒவர்களில் வெறும் 64 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அந்த அணியின் டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். மிகச்சிறிய மைதானமான ஷார்ஜாவில் 200 ரன்களுக்கு மேல் எடுத்தாலே வெற்றி பெறுவது எளிதல்ல. அதனால் 157 ரன்களை மிக எளிதாக எட்டி வெற்றி பெற்றது ஆர் சி பி அணி.