புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (14:14 IST)

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: 19 மாவட்டங்களில் கனமழை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல். 

 
நாளை ( நவம்பர் 13 ஆம் தேதி) அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது உருவான அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வட திசையில் நகர்ந்து பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவாகும் என கணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்க்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.