திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (13:39 IST)

தம்பி டீ ஒன்னு போடுப்பா…! – கேஷுவலாக விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் முதல்வர் சாலையோர தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அவ்வாறாக இன்று மாம்பாக்கம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள சாலையோர டீக்கடை ஒன்றில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அப்போது பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். பின்னர் மக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.