வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (12:37 IST)

தமிழகத்தில் ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு

தமிழகம் முழுவதும் சமக்ர சிக்‌ஷா அபியானில் பணியாற்றும் குறிப்பிட்ட பதவியில் உள்ள  ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என அறிவிப்பு.

 
தமிழகத்தில் அவ்வப்போது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் சமக்ர சிக்‌ஷா அபியானில் பணியாற்றும் நிரலர், கட்டட பொறியாளர்கள், கணக்காளர்கள், மாத பணி நிறைவு அறிக்கை தயார் செய்வோர், தரவு உள்ளீடு செய்வோர், ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் 15% ஊதிய உயர்வு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
இந்த ஊதிய உயர்வு நவம்பர் 1 ஆம் தேதி முதல் கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படும். நவம்பர் 1 ஆம் தேதிக்கு பின் பணியில் சேர்ந்திருந்தால் அவர்களுக்கு இந்த ஊதிய உயர்வு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.