வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2024 (11:45 IST)

சென்னை கடற்கரை - விழுப்புரம் தொழில்நுட்ப பணி: 19 மின்சார ரயில்கள் ரத்து.. முழு விவரங்கள்..!

Electric Train
சென்னை கடற்கரை - விழுப்புரம் மார்க்கத்தில் சென்னை கடற்கரை யார்டில் தொழில்நுட்ப பணி நடைபெறவுள்ளதால், 19 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு செப். 18, 20 ஆகிய தேதிகளில் இரவு 8.25, 8.55, 10.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் - சென்னை கடற்கரைக்கு செப். 18, 20 ஆகிய தேதிகளில் இரவு 9.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை - திருவள்ளூருக்கு அதே நாட்களில் இரவு 8.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை - அரக்கோணத்துக்கு செப். 19, 21 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரைக்கு செப். 18, 20 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டிக்கு செப். 18, 20 ஆகிய தேதிகளில் இரவு 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன.
 
சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு செப். 18, 20 ஆகிய தேதிகளில் இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய ரயில்கள், கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு செப். 19, 21 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
 
செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு செப்.18, 20 ஆகிய தேதிகளில் இரவு 9.10, 10.10, 11.00 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் - கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.
 
கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரைக்கு செப். 18, 20 ஆகிய தேதிகளில் இரவு 10.10, 10.40, 11.15 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள், தாம்பரம் - கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.
 
திருமால்பூர் - சென்னை கடற்கரைக்கு செப். 18, 20 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், எழும்பூர் - சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. 
 
இவ்வாறு சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran