டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி: மதுரையை தோற்கடித்தது திண்டுக்கல்
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று முன் தினம் திருச்சி அணியிடம் தோல்வி அடைந்த திண்டுக்கல் அணி இன்று மதுரை அணியை மிக எளிதில் தோற்கடித்தது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 169 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் அருண்கார்த்திக் 61 ரன்களும், சந்திரன் 35 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி 15.2 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விவேக் அதிரடியாக 33 பந்துகளில் 70 ரன்களும், ஜெகதீசன் 42 பந்துகளில் 68 ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியால் திண்டுக்கல் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.