1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 14 நவம்பர் 2018 (21:01 IST)

கடைக்காரருக்கு ’டிமிக்கு’ கொடுத்து தங்கக்கட்டிகள் ’அபேஸ்’

கரூரில் ஜவகர் பஜாரில் பிரபலமான நகைக்கடை ஒன்று உள்ளது. இங்கு சொக்கத்தங்கத்தை கட்டிகளாக மாற்றி சேலம், கோவை மாவட்டங்களுக்கு அனுப்பி நகைகளாக செய்து விற்பனை செய்து வந்தனர்.
இந்த கடையின் உரிமையாளருடன் கடந்த 10 வருடங்களாக பழக்கத்தில் இருந்த தீபக் மிட்டல் தீபாவளிக்கு முன்னதாக பல்வேறு கடைகளில் இருந்து தங்கக்கட்டிகள் 15 கிலோ பெற்றுவிட்டு காணாமல் போனதாக தெரிகிறது.
 
எனவே தீபக் மிட்டல் மீது சந்தேகம் அடைந்த உரிமையாளர்கள்  இதுகுறித்து போலீஸில் புகார் செய்தார்.
 
வழக்கு பதிவு செய்த போலீஸார் தீபக்மிட்டலை தேடி வருகின்றனர்.