வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (10:51 IST)

பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்க பாறைகள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவில் பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்க பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இரண்டு தங்க பாறைகள் மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுரங்கத் தொழில் வல்லுநர்கள் இவை பல மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டவை என்கிறார்கள்.
 
பாறையில் வெளி புறத்தில் தங்கம் கொண்ட இந்த இரட்டை பாறைகளில், ஒரு பாறையின் எடை 95 கிலோ மற்றொன்றின் எடை 63 கிலோ.95 கிலோ எடையுள்ள பாறையில் 2400 அவுன்ஸ் அளவுக்கு தங்கம் இருக்கிறது என்கிறது கனடா சுரங்கத் தொழில் நிறுவனமான ஆர்.என்.சி மினரல்ஸ். இதன் மதிப்பு பதினொரு மில்லியன் அமெரிக்க டாலர்கள்.