வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 25 ஜனவரி 2020 (14:54 IST)

150 ஆடுகள், 300 கோழிகளை பலியிட்டு வழிபாடு ... கமகம பிரியாணி விருந்து !

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முனியாண்டி கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு அசைவ பிரியாணி வழங்கக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள முனியாண்டி  கோவிலில் தை மாதத்தையொட்டி வருடம்தோறும் திருவிழா நடைபெறும்.  இந்த விழாவிற்காக பக்தர்கள் ஒருவாரம் காலம் காப்புக் கட்டி விரதம் இருப்பர்.
 
அத்துடன், தமிழகம், மற்றும் இதர மாநிலங்களில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருகின்ற  குடும்பத்தினர்கள் ஒன்றாக இணைந்து சுமார் 150 ஆடுகள் 300க்கும் மேற்பட்ட கோழிகளை பலியிட்டு வழிபாடு செய்தனர்.
 
இவ்வருடம் 85 வது ஆண்டு விழா என்பது குறிப்பிடத்தக்கது.