திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : வெள்ளி, 17 ஜனவரி 2020 (11:27 IST)

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளைகள்; அடக்க திணறும் வீரர்கள்

மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை சுமார் 7.30 மணியளவில் தொடங்கியது.
முதலில் மூன்று கோயில் காளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு அவிழ்த்து விடப்பட்டு போட்டி தொடங்கப்பட்டது.
 
பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் வந்துள்ளனர். வெளிநாட்டினர் கண்டுகளிக்க தனி கேலரியும் அமைக்கப்பட்டுள்ளது.
 
வெற்றி பெறுபவர்களுக்கு முதல்வர் சார்பாக ஒரு காரும், துணை முதல்வர் சார்பாக ஒரு காரும் வழங்கப்பட உள்ளது.
 
இன்று நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழக அமைச்சர் விஜய பாஸ்கர், இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் ஆகியோரின் காலைகளும் பங்கேற்கின்றன.
ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
பாலமேடு ஜல்லிக்கட்டு
நேற்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700 காளைகளும், 923 வீரர்களும் பங்கேற்றனர்.
 
பாலமேடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பிற்காக 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.
 
வாடிவாசலுக்கு அனுப்பப்படும் காளைகளை பரிசோதனை செய்யவும் அடிபடும் மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் 40 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழு ஒன்று பணியமர்த்தப்பட்டிருந்தது.
 
காளைகளுக்கு மது, போதைப் பொருள் போன்றவை கொடுக்கப்பட்டிருக்கிறதா என்றும், காய்ச்சல் உடல் உபாதைகள் இருக்கிறதா என்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
 
வெற்றி பெற்ற வீரர்களுக்கு கார் முதல் சைக்கிள் வரை பரிசாக வழங்கப்பட்டது.