வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (21:49 IST)

15 வயது பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம்: புதுமாப்பிள்ளை கைது

15 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் புது மாப்பிள்ளை உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 15 வயதான பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அவரது உறவினர்கள் கட்டாயமாக திருமணம் செய்து வைத்து விட்டனர். இந்த திருமணம் நடந்த ஒரு சில நாட்களில் பள்ளி மாணவி கொடுத்த புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர் 
 
இந்த விசாரணையில் 15 வயது மாணவிக்கு திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் பள்ளி மாணவியை திருமணம் செய்த புதுமாப்பிள்ளை மற்றுமொரு உறவினர் என இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி மாணவியின் சம்மதம் இல்லாமல் அவரை திருமணம் செய்ததற்காகவும், குழந்தை திருமண தடை சட்டத்தின்படியும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் மாணவியின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை செய்துவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
15 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது