செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (14:03 IST)

கொரோனா முடியாது போல... நிறுத்தி வைத்த நடிகையின் திருமணம் களைகட்டியது!

மலையாள நடிகை மியா ஜார்ஜ் தமிழில் அமரகாவியம் மற்றும் இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து அவருக்கு கேரளாவைச் சேர்ந்த அஸ்வின் பிலிப் என்பவரோடு திருமணம் நிச்சயமானது. அவர்கள் திருமணத்தை நடத்த இருந்த நிலையில் கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கொரோனா முடிந்தவுடன் அனைவரையும் அழைத்து பிரம்மாண்டமாக திருமணம் நடத்துவதா? அல்லது இப்போதே எளிமையாக நடத்துவதா என்ற குழப்பத்தில் இருக்கிறோம் எனத் அண்மையில் தெரிவித்திருந்தார். கொரோனா இப்போதைக்கு முடிவதாக இல்லை என்பதை திருமணத்தை சிம்பிளாக நடத்த முடிவெடுத்துள்ளார்.

ஆம், நேற்று  தொழிலதிபர் அஸ்வின் - மியா ஜார்ஜிற்கு திருமண நிச்சயதார்த்தம் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். மாப்பிள்ளையுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் மியா ஜார்ஜிற்கு ரசிகர்கள், நண்பர்கள் , பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இவர்களது திருமணம் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.