1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 15 lakhs people out from Chennai empty roads

சென்னையில் இருந்து வெளியேறிய 15 லட்சம் பேர்.. காலியாக இருக்கும் சாலைகள்..!

சென்னை
தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து சுமார் 15 லட்சம் பேர் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில் சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் காலியாக உள்ளது. 
 
சனி ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் தீபாவளி கொண்டாடுவதற்காக நேற்று இரவு லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர் 
 
இந்த நிலையில்  சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து வியாழன் முதல் இன்று வரை சுமார் 12 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அதேபோல் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் மூலம் கடந்த இரண்டு நாட்களில் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக தெரிகிறது. சென்னையில் இருந்து 15 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் சென்றுள்ள நிலையில்  சென்னையில் உள்ள அண்ணா சாலை உள்பட முக்கிய சாலைகள் காலியாக உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
இனி உயிர் உள்ளவரை பாஜக தான்: சிறையில் இருந்து வெளியே வந்த அமர் பிரசாத் ரெட்டி பேட்டி..!