வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (17:03 IST)

நடிகை கங்கனா ரணாவத் கொரொனாவில் இருந்து மீண்டார்

இந்தி சினிமாவில் முன்னணி நடிகை கங்கனா ரணாவத். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 67 தேசிய திரைப்பட விருதில் 4 முறையாக சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

சமீப காலமாக கங்கனா ரணாவத் இடும் சமூக வலைதளப்  பதிவுகளும், சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தினார்.

இதனால் இவரது ரசிகர்கள் கங்கனா ரனாவத் குணமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்து வந்தனர். இந்த பிரார்த்தனை பலித்துவிட்டது.

தான் கொரோனாதொற்றிலிருந்து மீண்டு விட்டது குறித்து நடிகை கங்கா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாவது:

நான் இன்று பரிசோதனை செய்துகொண்டேன். இதில், கொரொனா நெகெட்டிவ் என்று வந்துள்ளது முடிவு. எனக்குத் தொற்றில்லை என்பது உறுதியாகியுள்ளதால் நான் கொரோனாவை வென்று விட்டேன். எனக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் எனது அன்பார்த்த நன்றி எனத் தெரிவித்துள்ளார்.