செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 20 டிசம்பர் 2021 (17:47 IST)

மீனவர்கள் கைது - ராமேஸ்வரத்தில் வேலை நிறுத்தம்

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

 
மீனவர்களின் குடும்பத்தினர் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்தின் இறுதியில் மீனவர்கள அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யகோரி , வரும் புதன்கிழமை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் அனைவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது. 
 
தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தது என்றும் முடிவுசெய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
 
தனுஷ்கோடி - நெடுந்தீவு இடையே, ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர், அத்து மீறி மீன் பிடித்ததாக மீனவர்கள் 43 பேரை கைது செய்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள தமிழக யாழ்ப்பாணம் சிறையில் உள்ளனர். இதேபோல், மண்டபம் பகுதியில் இருந்து நேற்று சென்ற 12மீனவர்களையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும் அறிவி்த்துள்ளனர். இப்போராட்டத்தினால், 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், கடற்கரையில், நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. நேரடியாக 50ஆயிரம்மீனவர்களும் மறைமுகமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டமீன்பிடிசார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.