வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 11 டிசம்பர் 2021 (07:59 IST)

இன்று 14-வது மெகா தடுப்பூசி முகாம்: 50,000 மையங்களில் நடத்த ஏற்பாடு.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத்துறை ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பு ஊசியை செலுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. 
 
முதல் டோஸ் தடுப்பு ஊசி மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தாதவர்கள் இந்த சிறப்பு முகாம்களில் சலித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று ஏற்கனவே தமிழகத்தில் 13 தடுப்பூசி முகாம்கள் அடக்கப்பட்ட நிலையில் இன்று 14-வது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.