திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 20 அக்டோபர் 2021 (11:15 IST)

தஞ்சாவூரில் கோஷ்டி மோதல் - 144 தடை உத்தரவு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் போலீஸார் அப்பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். 

 
தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்சிக் கொடி கம்பங்களை அகற்ற வலியுறுத்தி வன்னிய சமூகத்தினர் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்களுக்கும் மாற்று சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. 
 
இதில் இரண்டு காவலர்கள் உட்பட சுமார் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் மறு அறிவிப்பு வரும் வரை 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.