ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (13:35 IST)

மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்! – தஞ்சையில் அதிர்ச்சி!

தஞ்சாவூரில் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக மருத்துவமனைக்குள்ளேயே குழந்தை கடத்தல் சம்பவங்கள் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் குணசேகரன் என்பவர் கர்ப்பமான தனது மனைவி ராஜலெட்சுமியை பிரசவத்திற்காக அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை மர்ம கும்பல் ஒன்று கடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸார் குழந்தையை கடத்தியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.