திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 24 மார்ச் 2022 (17:40 IST)

சிதம்பரம் நகரில் போராட்டம் நடத்த தடை: அதிரடி உத்தரவு

சிதம்பரம் நகரில் போராட்டம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஒரு மாதத்திற்கு தடைவிதித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். 
 
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மேலே ஏறி சாமி தரிசனம் செய்ய முக்கிய விஐபிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் பக்தர்கள் பேரவை போராட்ட குழுவினர் போராட்டம் நடத்த தடைவிதித்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது 
 
இந்த பிரச்சனை அரசு பரிசீலனை கொண்டு செல்லப்பட்டதால் அரசின் முடிவு வரும்வரை சிதம்பரம் கோவிலில் இன்று முதல் ஒரு மாதம் 144 தடை உத்தரவு வந்துள்ளதாக வருவாய் கோட்டாட்சியர் ரவி ஆணையிட்டுள்ளார்