1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 மார்ச் 2022 (19:32 IST)

3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றிருக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை

மத்திய அரசு சமீபத்தில் 3 வேளாண் திட்டங்களை திரும்ப பெற்றதை அடுத்து இந்த சட்டங்களை திரும்பப் பெற்றிருக்க கூடாது என உச்சநீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
3 வேளாண்மை சட்டங்களும் 86 சதவீத விவசாய சங்கங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன என்றும் விவசாயிகளுக்கு பலன் தரும் இந்த சட்டங்களை திரும்பப் பெற்றிருக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அமைத்த மூன்று நபர் குழு அறிக்கை தெரிவித்துள்ளது
 
விவசாயிகள் தொடர் போராட்டம் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் திரும்ப பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது