தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.. என்ன காரணம்?
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்துள்ளது
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் இன்றும் நாளையும் வீரசகாதேவி ஆலய திருவிழா நடைபெற உள்ளது. எனவே இன்று மாலை 6 மணி முதல் மே 12ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
இதன் காரணமாக ஐந்து அல்லது ஐந்து அதற்கு மேற்பட்ட நபர்கள் கூட கூடாது என்றும் பிற மாவட்டங்களில் இருந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் அபாயகரமான ஆயுதங்களை கொண்டு வரக்கூடாது என்றும் வெளி மாவட்ட வாகனங்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஆனால் அதே நேரத்தில் இந்த உத்தரவிலிருந்து பள்ளி கல்லூரி வாகனங்கள், அத்தியாவசியமான தினசரி வாகனங்களுக்கு விதிவிலக்கு உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்னதானங்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவதற்கு முன் காவல்துறையை அணுகி முன் அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
Edited by Mahendran