1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 144 ban in sivaganga for one week

அக்டோபர் 23 முதல் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேவர் குருபூஜை
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, சிவகங்கை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 23 முதல் 31ஆ  தேதி வரை  ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்றவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடகை வாகனங்களில் மரியாதை செலுத்த வருவோர் முறையான அனுமதி பெற வேண்டும்.
 
ஒவ்வொரு ஆண்டும் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவின்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் பசும்பொன் வந்து வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. 
 
இந்த கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்திற்கு வரும் 23 முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு எப ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு தெரிவித்துள்ளார். மருது பாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் பரிந்துரையின் பேரில் இந்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்: இஸ்ரோ என்ன செய்யப் போகிறது?