மல்லுகட்டிய மன்சூர் அலிகானை தரதரவென இழுத்து சென்ற போலீஸ்; சென்னையில் பரபரப்பு

<a class=Mansoor Ali Khan" class="imgCont" height="417" src="//media.webdunia.com/_media/ta/img/article/2018-12/20/full/1545287558-8969.jpg" style="border: 1px solid #DDD; margin-right: 0px; float: none; z-index: 0;" title="" width="740" />
Last Updated: வியாழன், 20 டிசம்பர் 2018 (21:35 IST)
தயாரிப்பாளர்கள் சங்க பிரச்சனையில் நடிகர் மன்சூர் அலிகானை போலீஸார் தரதரவென இழுத்து சென்று கைது செய்தனர்.
கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஷால் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதனால் நேற்று சென்னை தி. நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு தயாரிப்பாளர் பலர் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர் . 
 
மேலும் அவர்கள்,  சங்க தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் மீது கண்டிப்பு காட்டப்படுகிறது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக விஷால் மீது முன் வைத்தனர். 
 
இந்நிலையில் இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷாலின் எதிர் தரப்பினரால் போடப்பட்ட பூட்டுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுப்பதை அடுத்து இன்று அச்சங்கத்தின் தலைவர் விஷால் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். 
 
பூட்டை உடைத்தே தீருவேன் என விஷால் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் விஷாலை குண்டுக்கட்டாக கைது செய்தனர். 
 
பின்னர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகானை போலீஸார் நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டனர். பின்னர் அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :