வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 7 ஜனவரி 2022 (07:41 IST)

கோவில்களை மேம்படுத்த முதல்வர் தலைமையில் 13 பேர் குழு!

தமிழக கோவில்களை மேம்படுத்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
 
கோவில்களில் பக்தர்களுக்கு வசதிகளை மேம்படுத்தவும் பராமரிப்பை செம்மைப்படுத்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது
 
இந்த குழுவில் குன்றக்குடி அடிகளார், மதிவாணன், சுகிசிவம், ராமசுப்பிரமணியன், தரணிபதி, ராஜ்குமார் உள்ளிட்ட 13 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த குழுவினர் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் மேம்படுத்த சீரிய நடவடிக்கை எடுப்பார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.