தமிழகத்திற்கு இரண்டு நாட்களில் 13 லட்சம் தடுப்பூசிகள்! – தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்!!

Prasanth Karthick| Last Modified வியாழன், 13 மே 2021 (12:34 IST)
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டு நாட்களில் 13 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறையால் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்குள் தமிழகத்திற்கு 11.4 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 1.6 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பூசிகள் வந்த பிறகு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படலாம் என கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :