அரசு பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் வகுப்புகள் புறக்கணித்து இரண்டு அரசு பேருந்துகள் சிறை!
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே அண்ணாமலைசேரி கிராமத்தில் இயங்கி வரும் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 259-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 18 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய பள்ளியில் ஒரே ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில் அவரும் 16நாட்களாக பள்ளிக்கு வரவில்லை.
மேலும் தலைமை ஆசிரியர் முதற்கொண்டு மீதமிருந்த ஆசிரியர்களும் பணி மாறுதல் பெற்ற காரணத்தினால் பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் கல்வி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
இதனால் பள்ளி மாணவ மாணவியரும் பெற்றோர்கள் உடன் இணைந்து தற்போது சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.