வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 26 ஜூலை 2024 (07:42 IST)

15 வயது மாணவனுடன் தகாத உறவு.. போக்சோ சட்டத்தில் டியூஷன் ஆசிரியை கைது..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 15 வயது மாணவனுடன் டியூஷன் சொல்லிக் கொடுக்க வந்த ஆசிரியை தகாத உறவு இருந்ததை எடுத்து அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாதையை சேர்ந்த 22 வயது டியூசன் ஆசிரியை கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியை ஆக பணிபுரிந்து கொண்டே சில மாணவர்களுக்கு வீட்டிற்கு சென்று டியூஷன் நடத்தி வந்தார்.

அந்த வகையில் 15 வயது மாணவனுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் எல்லை மீறியதாகவும் இருவரும் தகாத உறவில் இருந்ததாகவும் தெரிகிறது. இதை அறிந்த மாணவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து டியூஷன் ஆசிரியை வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி தனது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டியூஷன் ஆசிரியர் மீது சிவகாசி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் டியூசன் ஆசிரியையை கைது செய்தனர். மேலும் மாணவனுக்கு அவனது பெற்றோர் கவுன்சிலிங் கொடுத்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva