கேம்களுக்கு தடை போட்ட பெற்றோர்; தூக்கு போட்டுக்கொண்ட சிறுவன்!
செல்போனில் கேம் விளையாடிய சிறுனை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டு மரணித்துள்ளான்.
கோவை செல்வபுரம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் ராதாகிருஷ்ணன் வயது 12. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் செல்போனில் கேம் விளையாடுவது வழக்கம் என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த கொரணாவின் ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சிறுவர்கள் செல்போணுக்கு அடிமையாகும் சுழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி அடிமையான இந்த சிறுவன் நேற்று மாலை செல்போனில் வெகு நேரம் கேம் விளையாடிக்கொண்டிருந்தான்.
இதனை கண்டித்த பெற்றோர்கள் சிறுவனிடமிருந்த செல்போனை எடுத்துக்கொண்டனர். மனமுடைந்த சிறுவன் இரவு அவனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். பள்ளி இல்லாதா இந்த காலகட்டத்தில் செல் போனுக்கு அடிமையாகி 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.