ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (14:11 IST)

11 ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை !

சென்னை கோயம்பேட்டில் 11 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில்  சமீப காலமாக  பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும்  நிலையில்,  இன்று மேலும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னை அடுத்த கோயம்பேட்டில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் அந்தோனி தினேஷ். இவரை  பெற்றோர் எதோ காரணத்திற்காக கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த மாணவர் வீட்டில் தனியாக இருக்கும்போது தற்கொலை செய்து  கொண்டார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.