திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 14 அக்டோபர் 2022 (14:43 IST)

டுவிட்டர் ஒப்பந்தம்: எலான் மஸ்க்கிடம் விசாரணை!

டுவிட்டர் ஒப்பந்தத்தில் இருந்து எலான் மஸ்க் விலகிய நிலையில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை.

 
டுவிட்டர் நிறுவனத்தை வாங்க கடந்த சில மாதங்களுக்கு முன் எலான் மஸ்க் முடிவு செய்தார் என்பதும் அதன் பின் டுவிட்டரில் போலி கணக்குகள் அதிகமாக இருப்பதால் அதை வாங்குவதில் இருந்து பின்வாங்கினார் என்பதும் தெரிந்ததே 

இந்நிலையில் எலான் மஸ்க்கிற்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  அந்த வகையில் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக டுவிட்டர் நிறுவனம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

டுவிட்டரை 54.20 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க கடந்த வாரம் எலான் மஸ்க் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி, வரும் 28 ஆம் தேதி வரை டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை மீண்டும் மேற்கொள்ள முடியாது.

'டுவிட்டரின் போலி கணக்குகள் விவரம் வேண்டும்' என்ற பெயரில் பொய்யாக காரணம் காட்டி, டுவிட்டர் ஒப்பந்தத்தில் இருந்து எலான் மஸ்க் விலக முயற்சித்தார் என கூறப்படுகிறது.

Edited By: Sugapriya Prakash