தமிழகத்தில் இருந்து பறந்த லிஸ்ட்... அமித்ஷா ரிப்லைக்கு வெய்ட்டிங்!!
தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் 11 பேரை தேர்ந்தெடுத்து தேச்ய தலைமைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து ஒரு சில மாதங்களாக தமிழக பாஜகவின் தலைவர் பதவி காலியாக உள்ளது.
இந்நிலையில் விரைவில் பாஜக தமிழக தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பாஜக மேலிடம் சீனியர்களுக்கு பதவி கொடுப்பதா? அல்லது இளைஞர்களுக்கு பதவி கொடுப்பதா? என்று ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போதைய தகவலின்படி தமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுக்க 11 பேர் கொண்ட லிஸ்டை ரெடி செய்து தலைமைக்கு அனுப்பப்பட்டுவிட்டதாம். அந்த லிஸ்ட்டில், பொன்.ராதகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சிபி ராதாகிருஷ்ணன், கே.டி ராகவன், மதுரை சீனிவாசன், கருப்பு முருகானந்தம், ஏ.பி முருகானந்தம், ஏ.என்.எஸ் பிரசாந்த், குப்புராம் ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.