வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 3 ஜூன் 2020 (16:07 IST)

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு
10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தேர்வுத்துறை அறிவித்துள்ளது
 
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதேபோல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஒரே ஒரு தேர்வும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வும் நடைபெறவுள்ளது.
 
இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் இந்த தேர்வு நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
இதன்படி http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது