புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 3 ஜூன் 2020 (11:38 IST)

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தேதி குறிப்பிடாமல் பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும் என கடந்த மாதம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் வேண்டுகோளுக்கு இணங்கி தற்போது ஜூன் 15ஆம் தேதிக்கு அந்த தேர்வு மாற்றப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வை மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சமீபத்தில் நடந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது
 
இதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மேலும் ஒத்தி வைப்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கருத்துக் கூறிய நீதிபதிகள், மாணவர்களின் நலன் கருதியே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தும் முடிவை அரசு எடுத்துள்ளது என்றும் எனவே பத்தாம் வகுப்பு பொது தேர்வு தள்ளி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிகிறது