வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2023 (17:49 IST)

10ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் வெளியாகும் தேதி.. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் மே மாதம் இறுதியில் வெளியான நிலையில் இந்த பொது தேர்வில்  குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த  மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட்டது. 
 
கடந்த ஜூலை மாதம் இந்த துணை தேர்வு நடத்தப்பட்ட நிலையில்  இந்த தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி பிற்பகல் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 
 
மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது எனவே மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்தின் உதவியுடன் தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Mahendran