செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 21 மார்ச் 2020 (11:48 IST)

நீங்கதான் சிறப்பாக செயல்படுறீங்க : எடப்பாடியாரை பாராட்டிய மோடி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழத்தின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகள் முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்துடனான அனைத்து மாநில எல்லைப்பகுதிகளும் மூடப்பட்டுள்ளன. எல்லைப்பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கொரோனா பரிசோதனை முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் பூரண நலமாகி வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் நாடு முழுவதும் மாநிலங்கள் மேற்கொண்டு வரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் தமிழகம் துரிதமாகவும், சிறப்பாகவும் செயல்படுவதாக பிரதமர் மோடி தனது பாராட்டுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துள்ளார்.