தேர்வு தேதியில் மாற்றம் இல்லை: செங்கோட்டையன் கறார்!
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
தமிழகத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் ஜூன் 1ம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜூன் 1 முதல் 12 வரை நடைபெறவிருக்கும் இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே பேட்டியளித்தார்.
தேர்வுகள் நடைபெற மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் தனிமனித இடைவெளியுடன் இந்த தேர்வு நடக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தேர்வு நடத்துவதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சற்றுமுன் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் , 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். தேர்வு தேதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.