சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: 94.5 சதவீதம் தேர்ச்சி
இன்று காலை சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து சற்றுமுன் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன
இந்த முடிவுகளை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை cbse.results.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது
ந்த நிலையில் நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய சிபிஎஸ்சி மாணவிகளில் 94.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மேலும் இந்த தேர்வை 20,93,978 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில் 19,76,668 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது