செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (08:39 IST)

திருப்புதல் தேர்வா? மினி பொதுத்தேர்வா? தேர்வுத்துறையின் முக்கிய அறிவிப்பு!

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு மினி பொது தேர்வு போல் நடத்த தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தேர்வுக்கு முதல் முறையாக தேர்வு துறை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்களை வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பொதுத் தேர்வுகள் மாநிலம் முழுவதும் ஒரே கேள்வி தாள் வெளியிடுவது போலவே இந்த திருப்புதல் தேர்வு ஒரே மாதிரியான கேள்வித் தாள் வெளியிட உள்ளதால் இது ஒரு மினி பொது தேர்வு போலவே கருதப்படும்
 
இந்த திருப்புதல் தேர்வு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுதும் அனுபவத்தை கொடுக்கும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திருப்புதல் தேர்வு கேள்வித்தாள்களை அந்தந்த பள்ளியிலேயே திருத்தக் கூடாது என்றும் தேர்வுத்துறை ஏற்கனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது